Monday, April 16, 2012

அஜித் குமார்






இயற்பெயர் அஜித் குமார்
பிறப்பு மே 1, 1971, ஹைதராபாத் , இந்தியா
நடிப்புக் காலம் 1992 - தற்போது
மனைவி ஷாலினி

தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல் போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.


அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்ப்டங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986ல் உயர்தர கல்வியைப் பூர்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.

அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.

2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.

2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.


No comments:

Post a Comment