Saturday, July 23, 2011

கைக்கடிகாரம் போல் கையில் கட்டிக்கொள்ளும் டெக்பெர்ரி போன்!

Techberry TB007

எப்படியாவது சந்தையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில நிறுவனங்கள் பல்வேறு வடிவங்களில் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த வகையில் டெக்பெர்ரி நிறுவனம் கைக்கடிகாரம் போன்று கையில் கட்டிக்கொள்ளும் வித்தியாசமான மொபைல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் கையில் கட்டிக்கொள்ளும் மொபைல்போன் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெக்பெர்ரி டிபி-007 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போனின் வடிவமைப்பு அசத்துகிறது. 1.5 இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த போன் கைகளில் கட்டும்போது சரியாக பொருந்துவதற்கு ஏதுவாக ஸ்பெஷல் பைபர் மெட்டிரீயலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் ஸ்டான்ட்-பை மோடு கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.இதில், மியூசிக் பிளேயர், எப்எம் ரேடியோ மற்றும் ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளது. யுஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது.

விஜிஏ பார்மெட்டில் வீடியோ ரெக்கார்டிங் வசதிகொண்ட 1.3 மெகாபிக்செல் கேமராவையும் கொண்டிருக்கிறது. சிறிய அளவிலான இந்த போனில் அனைத்து வசதிகளும் இருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இந்த போன் தற்போது சென்னையில் உள்ள டெக்பெர்ரி பிரத்யேக ஷோரூமிலிருந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த போனை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த போனுக்கு சந்தையில் ஏற்படும் வரவேற்பை பொறுத்த அடுத்ததாக, இதே மாடலில் 3ஜி தொழில்நுட்ப வசதியுடன் புதிய போனை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெக்பெர்ரி டிபி-007 போனுக்கு ரூ.9,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment