Friday, July 29, 2011

விரைவில் புதிய டியூவல் சிம் போன்: ஜி-பைவ்

G five 9900i




இந்தியாவின் மொபைல்போன் உற்பத்தியில் மூன்றாவது இடம் வகிக்கும் ஜி-பைவ் நிறுவனம், பெருவாரியான அளவில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது. குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் போன்களை அறிமுகப்படுத்தி வருவதால், ஜி-பைவ் போன்களுக்கு மார்க்கெட்டில் தனி இடம் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், ரூ.2,999 விலையில் புதிய போனை ஜி-பைவ் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. ஜி-9900ஐ என்ற குறியீட்டு பெயரில் வரும் இந்த போன் கொடுக்கும் பணத்திற்கு நிறைவான வசதிகளை தரும் வகையில் இருக்கும்.

டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்ட இந்த போன் 2.4 திரையுடன் கிவெர்ட்டி கீபேடு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பார்மெட்டுகளிலும் ஆடியோ, வீடியோ பைல்களை இயக்கும் வசதியை கொண்டிருக்கிறது.

விஜிஏ பார்மெட்டில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதிகொண்ட 1.3 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எப்எம் ரேடியோ, சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் உண்டு.

போதுமான சேமிப்பு திறன் கொண்ட இந்த போனில் 8 ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இது 140 கிராம் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள டியூவல் கேமரா மூலம் வீடியோ காலிங்கும் செய்ய முடியும். இதற்கு தக்கவாறு ஜிபிஆர்எஸ் கனெக்ட்டிவிட்டி மற்றும் புளூடூத் ஆகிய இணைப்பு வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். கம்ப்யூட்டருடன் இணைத்துக்கொள்ள ஏதுவாக யுஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது.

ரூ.2,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த போன் மைக்ரோமேக்ஸ், மேக்ஸ், ஸ்பைஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment