Saturday, July 23, 2011

ரூ.1,850 விலையில் டியூவல் சிம் போன்: நோக்கியா அறிமுகம்


Nokia X1 01



குறைந்த விலை மொபைல்போன் தயாரிப்பாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில் புதிய டியூவல் சிம் போனை சமீபத்தில் களமிறக்கியுள்ளது நோக்கியா.

எக்ஸ்-1-01 என்ற குறியீட்டுடன் சந்தைக்கு வந்துள்ள இந்த போனால், மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் லாவா ஆகிய நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

நோக்கியாவின் பிராண்டு மதிப்பு, டியூவல் சிம் என எக்ஸ்1- 01 ஐ தேர்வு செய்ய பல காரணங்களை முன் வைக்கலாம்.

1.8 இஞ்ச் டிஎப்டி திரை, சாதாரண வகை கீபேடுடன் வந்துள்ளது எக்ஸ்1-01.

எக்ஸ்-1 01ல் மியூசிக் பிளேயர் மற்றும் 16 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனை பெருக்கிக்கொளளும் வசதிகள் இருக்கிறது.

இதன் முக்கிய சிறப்பம்சம் ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 36 மணிநேரத்திற்கு இசையை கேட்டு மகிழும் வகையில் ஆற்றல் வாய்ந்த பேட்டரியை பொருத்தியுள்ளது நோக்கியா. எந்நேரமும், எப்போதும் இசையை கேட்க எப்எம் ரேடியோவும் உண்டு.

தவிர, பிளே லிஸ்ட்டை இயக்குவதற்கு போனின் வலதுகை பக்கவாட்டில் மூன்று பிரத்யேக பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஸ்பீக்கர்களை இணைக்க ஏதுவாக 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக்கும் உள்ளது.

இதன் 1320 mAh திறன் கொண்ட பேட்டரி 43 நாட்களுக்கு ஸ்டான்ட்-பை மோடிலும், 14 மணி நேர டாக்டைம் கொடுக்கும் வல்லமை கொண்டுள்ளது.

இதன் முக்கிய அம்சம் போனை அணைக்காமலேயே இரண்டாவது சிம் கார்டை பொருத்திக்கொள்ள முடியும்.

அனைத்து அடிப்படை அம்சங்களையும் நிறைவாக கொண்டுள்ள இந்த போனுக்கு ரூ.1,850 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment